உலகச் செய்திகள்

இதயம் இல்லாமல் 555 நாட்கள் வாழ்ந்த இளைஞர்.. மருத்துவத்திற்கு சவால் விட்ட சாதனை- யார் இவர்?

555 நாட்கள் இதயமே இல்லாமல் மருத்துவமனைக்கு வெளியே வாழ்ந்து இளைஞர் சாதனை படைத்துள்ளார். பொதுவாக இதயம் துடிப்பதை நிறுத்தினால் அடுத்த சில நிமிடங்களில் நாம் இறந்து விடுவோம் என நினைத்து கொண்டிருக்கின்றோம். ஆனால் நாம் நினைப்பது போல் சில சமயங்களில் நடப்பதில்லை. மாறாக மனிதர்களின் மருத்துவத்தையும் தாண்டி சில வியப்பான விடயங்கள் நடக்கின்றன. அந்த வகையில் போலியான இதயத்தை வைத்து 555 நாட்கள் உயிர் வாழ்ந்த இளைஞரின் கதை இணையவாசிகளை மிரள வைத்தள்ளது.

ஸ்டான் லார்கின் 16 வயது வரை ஆரோக்கியமான இளைஞராக இருந்தார், அப்போது கூடைப்பந்து விளையாட்டின் போது அவர் மயங்கி விழுந்தார். மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஸ்டானுக்கு ” பேமிலி கார்டியோமயோபதி” என்று அழைக்கப்படும் ஒரு மரபணு இதய நோய் இருப்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவரின் குடும்பத்தை பரிசோதித்து பார்த்ததில் அவரது 24 வயதான சகோதரர் டொமினிக் என்பவரும் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

பல போராட்டங்களுக்கு பின் ஸ்டான் வெளியில் வாழ்வதற்கான அனுமதியை மருத்துவர்கள் கொடுத்துள்ளனர். அவரின் இதயத்தை அகற்றி விட்டு செயற்கையான இதயத்தை வைத்துள்ளனர். இதற்கான செயற்பாட்டை பின்னால் ஒரு பை மாட்டி அதில் கண்காணித்து வந்துள்ளனர். இப்படியாக 555 நாட்கள் ஸ்டான் உயிர் வாழ்ந்துள்ளார். பின்னர் அவருக்கான இதயம் கிடைத்து விட்டது. தற்போது அறுவை சிகிச்சை செய்து கொண்டு சாதாரண மனிதர்கள் போல் வெளியில் நடமாடுகிறார். சாவை விளிம்பு வரை சென்று பார்த்த முதல் மனிதராக ஸ்டான் பார்க்கப்படுகிறார். இவர் பையில் பொருத்தப்பட்டிருந்த செயற்கை இதயம் “ஃப்ரீடம் டிரைவர்” என்று அழைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Back to top button