ஆன்மிகம்

தைப்பூசம் 2024… கேட்டதை கொடுக்கும் முருகனுக்கு எப்படி விரதம் இருப்பது?

முருகனுக்கு உகந்த தினமான தை பூசத்தில் வாழ்வில் வெற்றியும், முன்னேற்றமும் கிடைக்க விரதம் மேற்கொள்வது எப்படி என்பதை தெரிந்து கொள்வோம். தை மாதத்தில் பௌர்ணமியும், பூச நட்சத்திரமும் இணைந்து வரும நாளையே தைபூசமாக கொண்டாடுகின்றனர். இந்நாள் முருகப்பெருமானுக்கு உரிய சக்திவாய்ந்த விரதங்களில் ஒன்றாகும்.

இந்நாளில் விரதம் மேற்கொண்டால் வாழ்வில் வெற்றியும், முன்னேற்றமும் கிடைப்பதுடன் வீட்டில் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். ஜனவரி 25ம் தேதியான நாளை தைப்பூசம் கொண்டாப்படும் நிலையில், காலை 9.14 முதல் மறுநாள் அதாவது ஜனவரி 26 காலை 11.07 வரை பூசம் நட்சத்திரம் உள்ளது. இன்று இரவு 10.44 முதல் 25-ம் தேதி இரவு 11.56 வரை பௌர்ணமி திதி வருவதால், ஜனவரி 25ம் தேதி தைப்பூசம் கொண்டாடப்படுகிறது.

தைப்பூசம் ஏன் கொண்டாடுகிறோம்?
அசுரர்களை அழித்து தேவர்களை காக்க அன்னை பராசக்தியிடம் முருகப்பெருமாள் ஞானவேலை பெற்ற தினம் தான் இந்த தைப்பூசம்.

வேல் என்பது வெற்றியையும், ஞானத்தையும் குளிப்பதுடன், வேலின் கூர்மையான பகுதி போன்று அறிவு கூர்மையாக இருக்க வேண்டும்எ என்றும், வேலின் அகன்ற பகுதியை பறந்து விரிந்திருப்பது போன்று ஞானம் இருக்கவும், வேலின் தடி பகுதி ஆழமாக இருப்பதால் அறிவு ஆழமானதாக இருக்க வேண்டுமாம்.

நாளையை தினம் காலையில் முருகனை நினைத்து உபவாசம் இருந்து வழிபட வேண்டும். இரண்டு வேலை பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதத்தை மேற்கொள்ளலாம். வீட்டில் முருகன் படத்திற்கு மலர் மாலை சாற்றி பூஜை செய்யவதுன், பாயாசம், சர்க்கரைப்பொங்கள் இனிப்பை நைவேத்யமாக படைத்து வழிபடலாம்.

இவ்வாறு செய்ய முடியாதவர்கள் வெற்றிலைப் பாக்கு, பழம் மட்டும் வைத்து மனமுருகி முருகனிடம் வேண்டினால் வேண்டுதல் நிச்சயம் நடைபெறும். சிறந்த பலனும் கிடைக்கும்.

Back to top button