உடல்நலம்

பத்தே நாளில் தொப்பையை குறைக்கணுமா? அப்போ இந்த வீட்டு வைத்தியம் போதும்

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்களின் பிரச்சினையாக காணப்படுவது உடல் எடை அதிகரிப்பு தான் இதனால் உடல் ரீதியாக அசௌகரியங்களை எதிர்நோக்குவது மட்டுமல்லாமல் உளவியல் ரீதியாகவும் பல பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். தற்காலத்தில் ஆண்கள் பெண்கள் என இருபாலாரும் பெரும்பாலும் வேலைக்கு செல்பவர்களாகவே இருக்கின்றனர். இதற்கிடையில் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற ஆசை இருந்த போதிலும் அதற்காக நேரம் ஒதுக்குவது கடினமானதாகவே அமைகின்றது.

பெரும்பாலானவர்கள் எப்படியாவது தொப்பையை குறைக்க வேண்டும் என குடும்பத்துடன் செலவிட வேண்டிய நேரத்தை கூட ழுமுமையாக ஜிம்மில் செலவிடுகின்றனர். இருப்பினும் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்ட பின்னரும் எந்த பயனும் இல்லை என புலம்புபவர்கள் தான் அதிகம். ஆனால் இயற்கையானதும் எளிமையானதுமான சில வழிமுறைகளின் மூலம் இலகுவாக தொப்பை பிரச்சினைக்கு முடிவுக்கட்ட முடியும். அத்தகைய ஒரு முறை குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தினசரி காலையில் வெந்தயம் மற்றும் பெருஞ்சீரகம் ஆகியவற்றை ஊறவைத்து அந்த தண்ணீரை பருகினால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் தொப்பையை குறைக்க உதவும்.

நன்மைகள்
தினமும் காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை பருகி வந்தால் உடலில் உள்ள நச்சுத்தன்மைகள் மற்றும் கழிவுகள் உடனடியாக வெளியேறும். இந்த தண்ணீரை 15 நாட்களுக்கு மேல் தொடர்ந்து பாவிக்க கூடாது.

வெந்தயம் மற்றும் பெருஞ்சீரகம் இரண்டிலும் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வெந்தயம் மற்றும் பெருஞ்சீரக தண்ணீர் செரிமான பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கொடுக்கும்.

மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக காணப்படுகின்றது.

வெந்தயம் மற்றும் பெருஞ்சீரக தண்ணீரை தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடையை விரைவில் கட்டுக்குள் கொண்டுவரலாம். இது எடை இழப்பு செயல்முறையை துரிதப்படுத்துகின்றது.

Back to top button