நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு
ஆறு அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்காக வெளியிடப்பட்டிருந்த உச்ச சில்லறை மற்றும் தொகை விலைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அதிகார சபையின் தலைவர் சாந்த கிரியெல்ல இது தொடர்பில் தெரிவிக்கையில், செத்தல் மிளகாய், வெள்ளைச்சீனி, இறக்குமதி செய்யப்படும் நெத்தலி, இறக்குமதியாகும் பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு, மைசூர் பருப்பு ஆகியவற்றின் சில்லறை மற்றும் தொகை விலைகளே இந்த திருத்தத்தின் மூலம் குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அந்தவகையில், செத்தல்மிளகாய் ஒருகிலோ 840 ரூபா, வௌ்ளைச்சீனி ஒரு கிலோ 262 ரூபா, இறக்குமதி செய்யப்படும் நெத்தலி ஒரு கிலோ 850 ரூபா, இறக்குமதிசெய்யப்படும் பெரிய வெங்காயம் 310 ரூபா, உருளைக்கிழங்கு ஒரு கிலோ 110 ரூபா, மைசூர் பருப்பு ஒரு கிலோ 290 ரூபா என தொகை விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, செத்தல்மிளகாய் ஒருகிலோ 970 ரூபா முதல் 1100 ரூபா வரை, வெள்ளைச்சீனி 275 – 310 ரூபாவரை இறக்குமதி செய்யப்படும் நெத்தலி ஒரு கிலோ 1959 – 1250 வரை, இறக்குமதிசெய்யப்படும் பெரிய வெங்காயம் 330 – 400 வரை, உருளைக்கிழங்கு ஒரு கிலோ 150 முதல் 200 வரை, மைசூர் பருப்பு ஒரு கிலோ 310 – 380 வரை சில்லறை விலை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.