ஏனையவை

Doraemon Cake: 10 நிமிடத்தில் செய்யலாம் டோரேமான் கேக்

டோரேமான் கேக் என்பது பிரபலமான ஜப்பானிய உணவாகும். இது பலராலும் பார்க்கப்பட்ட டோரேமான் கார்டூன் மூலம் மிகவும் பிரபலமடைந்தது.

பொதுவாகவே சிறியவர்களுக்கு கார்டூன் பழக்கம் கட்டாயம் இருக்க தான் செய்யும். அதிலும் டோரேமான் கார்டூனுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

எனவே எப்படி வீட்டிலேயே செய்து அதை நீங்கள் ருசித்து பார்க்கலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்
முட்டை – 2

பேக்கிங் சோடா – 1 சிட்டிகை

தேன் – 1 தேக்கரண்டி

பவுடர் சர்க்கரை – 3 தேக்கரண்டி

மைதா மா

பால் – அரை கப்

செய்முறை
முதலில் இரண்டு முட்டையை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அடித்துக்கொள்ளவும்.

அதில் பேக்கிங் சோடா, தேன், பவுடர் சர்க்கரை, மைதா மா மற்றும் பால் சேர்த்துக் கொள்ளவும்.

பின் அதை தோசை சுடுவது போன்று அல்லது பேன் கேக் செய்வது போன்று சுட்டு எடுக்கலாம்.

சுட்டு எடுத்தவுடன் இறுதியாக Nutella சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம்.

Back to top button