ஆன்மிகம்இன்றைய ராசி பலன்

எதிர்பாராத யோகத்தை அடையும் ராசியினர்; இன்றைய ராசிபலன்

சோபகிருது வருடம் மாசி மாதம் 10 ஆம் தேதி வியாழக்கிழமை 22.02.2024,சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார். இன்று மாலை 03.14 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி, இன்று மாலை 06.26 வரை பூசம். பின்பு ஆயில்யம். கேட்டை மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷம்
நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேர்வீர்கள். கூட்டுத் தொழிலில் அதிக ஆதாயம் அடைவீர்கள். விட்டுக் கொடுத்துப் போவதன் மூலம் பிரச்சனைகளை தவிர்ப்பீர்கள். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் தொழிலுக்கு தேவையான நன்மையை பெறுவீர்கள். பணப்பற்றாக்குறையை களைவீர்கள்.

ரிஷபம்
ரிஷபம்
பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்து நிம்மதி பெறுவீர்கள். தூரதேசப் பயணங்கள் மூலம் புதிய ஆர்டர்களை பெற்று தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அரசுப் பணியாளர்கள் சம்பள உயர்வு பெறுவீர்கள். மறைமுக எதிர்ப்புகளை ஒழிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் மேம்பாடு காண்பீர்கள். விரும்பிய பெண்ணின் அன்பை பெறுவீர்கள்.

மிதுனம்
மிதுனம்
எல்லாவிதமான குடும்பத் தேவையையும் பூர்த்தி செய்வீர்கள். பெரிய மனிதர்களின் ஆதரவால் சிக்கலான விஷயங்களைக் கடப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து தேவையற்ற நெருக்கடிகளைத் தவிர்ப்பீர்கள். ரத்த அழுத்தத்தை குறைக்க இயற்கை உணவுகளை உட்கொள்வீர்கள். நெருக்கடியிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள்.

கடகம்
கடகம்
தொழிலில் அதிகமான முதலீடு செய்யாதீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள். பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கத்தை காண்பீர்கள். போட்டிகளைச் சமாளிக்க சிரமப்படுவீர்கள். வெளியூர்களில் இருந்து வரவேண்டிய செய்திகளை தாமதமாக பெறுவீர்கள். புரியாமல் பேசி காதலியின் அன்பை இழப்பீர்கள்.

சிம்மம்
சிம்மம்
குடும்பத்தில் உங்கள் கருத்துக்களைத் திணிக்காதீர்கள். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வெளியூர் பயணத்தின் போது உணவு விஷயத்தில் கட்டுப்பாட்டை இழக்காதீர்கள். வேலையிடத்தில் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாதீர்கள். வியாபாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலையால் பற்றாக்குறை ஏற்பட்டு தடுமாற்றம் அடைவீர்கள்.

கன்னி
கன்னி
தொழிலில் நல்ல வளர்ச்சி அடைவீர்கள். தக்க சமயத்தில் நண்பர்களின் உதவியை பெறுவீர்கள். கட்டிடத் தொழிலாளர்கள், எலெக்ட்ரீசியன்கள், சிறு தொழில் செய்பவர்கள் நல்ல ஆதாயம் அடைவீர்கள். வெளிநாட்டில் இருந்து நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தியை பெறுவீர்கள் . வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்க ஏற்பாடு செய்வீர்கள். பிள்ளைகள் கல்வித் திறனால் பெருமை அடைவீர்கள்.

துலாம்
துலாம்
கால நேரம் பார்க்காமல் வேலை செய்து கடனை அடைப்பீர்கள். தொழிலுக்குத் தேவையான உபகரணங்களை வாங்குவீர்கள். வேலை இடங்களில் இருந்த பிரச்சனைகளை களைவீர்கள். போட்டி பந்தயங்களில் நல்ல லாபம் பெறுவீர்கள். கடல்கடந்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். காதலிக்காக தங்க நகை வாங்கி கொடுப்பீர்கள். குலதெய்வம் கோவிலுக்கு செல்வீர்கள்.

விருச்சிகம்
விருச்சிகம்
நேற்று தடைபட்ட வேலைகளை இன்று செய்து முடிப்பீர்கள். மனதை அழுத்திக் கொண்டிருந்த கவலையை போக்குவீர்கள். வேலை இடங்களில் சுமூகமான நிலையை உருவாக்குவீர்கள். தந்தையாரை மருத்துவமனையில் சேர்ப்பீர்கள். நல்ல பலனைப் பெறும் வகையில் வெளியூர்ப் பயணங்கள் செல்வீர்கள் . உறவினர் மத்தியில் மரியாதையை அதிகரிப்பீர்கள்.

தனுசு
தனுசு
கடுமையாக வேலை செய்தாலும் எதிர்பார்த்த பலனை அடைய மாட்டீர்கள். அனாவசியமான காரியங்களில் தலையிட்டால் அவமானங்களை சந்திப்பீர்கள். பெண்களிடம் எட்டி நின்றே பழகுங்கள். வங்கி வேலைகள் தாமதமாகி மன அழுத்தம் அடைவீர்கள். கணக்கு வழக்குகளை கவனமாக எழுதி வைக்க தவறாதீர்கள். இன்று சந்திராஷ்டம நாள் எச்சரிக்கையாக செயல்படுங்கள்.

மகரம்
மகரம்
உற்சாகமான பேச்சால் உறவுகளைப் பலப்படுத்துவீர்கள். வீட்டில் திருமணப் பேச்சு வார்த்தைகள் நடத்துவீர்கள். குடும்பத்தில் குதூகலத்தை உண்டாக்குவீர்கள். வேலை இடங்களில் இருந்த பிரச்சனையை விலக்குவீர்கள். அரசுப் பணியாளர்கள் அதிக நன்மை அடைவீர்கள். கட்டிடத் தொழிலாளர்கள் கணிசமான பணம் சேர்ப்பீர்கள். ஒர்க்ஷாப்பில் நல்ல வருமானம் பார்ப்பீர்கள்.

கும்பம்
கும்பம்
தடைகளைத் தகர்த்து வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். எதிரிகள் உங்களை வீழ்த்தப் பார்ப்பார்கள். சாதுரியமாக சமாளிப்பீர்கள். சொந்த பந்தங்களில் சின்னச் சின்ன சிக்கல்களை சந்திப்பீர்கள். வாகனங்களில் செல்லும்போது கவனத்தைச் சிதற விடாதீர்கள். மின்சாரப் பொருட்கள் பழுதாகி சிரமப்படுவீர்கள்.

மீனம்
சகோதரிகளுக்குத் திருமணம் செய்து வைக்க பேச்சுவார்த்தை நடத்துவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த வில்லங்கங்களை தீர்ப்பீர்கள். மனைவி குழந்தைகளால் மனநிம்மதி இழப்பீர்கள். நண்பர்கள் உதவியால் தொழிலை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் அதிக நன்மையை அடைவீர்கள். முக்கியமான கடனை அடைக்கப் போராடுவீர்கள்.

Back to top button