உடல் எடை அதிகரிக்கணுமா? 30 நாட்களில் பலன் உண்டு
அற்புத மூலிகையான பொன்னாங்கண்ணி கீரையை ”கீரைகளின் ராஜா” என்றழைக்கப்படுகிறது.
உடலில் பலவித நோய்களை குணப்படுத்தும் தன்மை கொண்டது இந்த கீரை. பொன் போன்ற மினுமினுப்பையும் அழகையும் தரக்கூடியது என்பதால் இக்கீரையை இவ்வாறு அழைக்கின்றனர்.
இதில் இரும்புசத்து, வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் வளமாக நிறைந்திருக்கின்றன.
இக்கீரையை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கண்பார்வை தெளிவாகும், கண்களுக்கு ஒளியினை தரக்கூடியது.
காசநோய், இருமல், வெப்ப நோய்கள் போன்றவற்றை சரிசெய்யக்கூடியது பொன்னாங்கண்ணி கீரை.
வாரம் இரண்டுமுறை கீரையை சமைத்து சாப்பிட்டு வர இதயம் மற்றும் மூளை புத்துணர்வு பெறும்.
இந்த பதிவில் உடல் தேகம் வலிமை பெற கீரையை சமைக்கும் விதம் பற்றி தெரிந்து கொள்வோம்.
பொன்னாங்கன்னி கீரை- 200 கிராம்
பாசிப்பருப்பு- 100 கிராம்
நெய்- தேவையான அளவு
செய்முறை
முதலில் தேவையான அளவு பொன்னாங்கன்னி கீரை எடுத்து பழுப்பு இலைகளை நீக்கி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.
இதனை இட்லி பாத்திரத்தில் மேல் தட்டில் வைத்து இட்லி பாத்திரத்தின் உள்ள நீரில் பாசிப்பருப்பை போட்டு வேகவைத்து எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு நெய் ஊற்றி சூடானதும் அதில் பொன்னாங்கன்னி கீரை மற்றும் பாசிப்பருப்பு சேர்த்து வதக்கவும்.
இப்படி ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையை அதிகரிப்பதுடன் தேகம் மினுமினுப்படையும்.