கோடீஸ்வர விருந்தினர்களுக்கு அதிசொகுசு கூடாரங்கள்., களைகட்டும் அம்பானி வீட்டு திருமண கொண்டாட்டம்
முகேஷ் அம்பானியின் கடைசி மகன் திருமண கொண்டாட்டத்தில் பெங்கேற்கவுள்ள முக்கிய விருந்தினர்கள் கூடாரத்தில் தங்கவைக்கப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி-நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணம் வரும் ஜூலை 12-ஆம் திகதி அம்பானியின் வீட்டில் நடைபெறவுள்ளது.
அதற்கான திருமண வேலைகளை அம்பானி குடும்பத்தினர் தொடங்கிவிட்டனர். ஒரு வாரத்துக்கு முன்னாடி லக்ன பத்ரிகையும் எழுதப்பட்டது.
மூன்று நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் மார்ச் முதலாம் திகதி முதல் 3-ஆம் திகதி வரை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெறவுள்ளது.
Anant Ambani pre-wedding festivities, Anant Ambani-Radhika Merchant, Mukesh Ambani-Nita Ambani, Billionaires, Mukesh Ambani guest, ultra-luxury tents, கோடீஸ்வர விருந்தினர்கள் தங்க அதிசொகுசு கூடாரங்களை அமைக்கும் அம்பானி., களைகட்டும் ஆனந்த்-ராதிகாவின் திருமண கொண்டாட்டம்
அதி சொகுசு கூடாரங்கள்
இவ்விழாவிற்கு உலகம் முழுவதிலும் இருந்து பெரும் கோடீஸ்வரர்கள், முக்கிய பிரமுகர்கள் வருவார்கள்.
ஆனால், ஜாம்நகரில் ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் இல்லாததால், கொண்டாட்டத்திற்கு வரும் கோடீஸ்வர விருந்தினர்களுக்கு அம்பானி குடும்பத்தினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் போல் விருந்தினர்கள் தங்குவதற்கு அதி சொகுசு கூடாரங்கள் (ultra-luxury tents) அமைக்கப்பட்டு வருகின்றன.
விருந்தினர்களுக்கான இந்த ஆடம்பரமான கூடாரங்களில் டைல்ஸ் குளியலறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன.
பாலிவுட் பிரபலங்கள் அமிதாப் பச்சன், ஷாருக்கான், கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் திருமண விழாவிற்கு அழைப்பிதழ் பெற்றவர்களில் அடங்குவர்.
வணிக ஜாம்பவான்களில் மெட்டா சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், ஆல்பாபெட் சிஇஓ சுந்தர் பிச்சை, அடோப் சிஇஓ சாந்தனு நாராயண், பிளாக்ராக் சிஇஓ லாரி ஃபிங், அட்னாக் சிஇஓ சுல்தான் அகமது, வால்ட் டிஸ்னி சிஇஓ பாபா இகர் ஆகியோர் அடங்குவர்.
மேலும் உள்நாட்டு வணிக ஜாம்பவான்களில் கவுதம் அதானி, டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரன், கோத்ரேஜ் குடும்பம், இன்ஃபோசிஸ் தலைவர் நந்தன் நிலேகனி, பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா, ஆர்பிஎஸ்ஜி குழுமத் தலைவர் சஞ்சீவ் கோயங்கா, ஆதார் பூனாவாலா, சுனில் மிட்டல், பவன் முஞ்சால், நிகில் கமத், திலீப் சங்வி போன்றவர்கள் இருக்கிறார்கள்.
Anant Ambani pre-wedding festivities, Anant Ambani-Radhika Merchant, Mukesh Ambani-Nita Ambani, Billionaires, Mukesh Ambani guest, ultra-luxury tents, கோடீஸ்வர விருந்தினர்கள் தங்க அதிசொகுசு கூடாரங்களை அமைக்கும் அம்பானி., களைகட்டும் ஆனந்த்-ராதிகாவின் திருமண கொண்டாட்டம்
வருங்கால மருமகளுக்கு விலையுயர்ந்த பரிசுகள்
முகேஷ் அம்பானி- நீதா அம்பானி தம்பதி தங்களது வருங்கால மருமகள் ‘ராதிகா மெர்ச்சன்ட்’க்கு விலை உயர்ந்த பரிசுகளை அளித்துள்ளனர்.
அவற்றில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள கார், பல லட்சம் மதிப்புள்ள வெள்ளி மற்றும் வைர நகைகள் அடங்கும்.
மாமியார் தனது வருங்கால மருமகளுக்கு சுமார் 4.5 கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ட்லி கார், வெள்ளி லட்சுமி கணபதி சிலை மற்றும் வைர நெக்லஸ்களை பரிசாக அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.