ஆன்மிகம்

வீட்டில் பண வரவை அதிகரிக்க வேண்டுமா? மாவிலையை இப்படி கட்டுங்க

வீட்டின் தலைவாசல் என்பது மிகவும் முக்கியமான பகுதியாகும். இங்கு நாம் செய்யும் ஒவ்வொரு விஷயமும் ஒட்டுமொத்த வீட்டையும் பாதுகாப்பு செய்யும் விதமாக அமையும். வீட்டு வாசலில் மாவிலை கட்டுவது என்பது காலம் காலமாக நம்முடைய பாரம்பரிய வழக்க முறைகளில் ஒன்றாக இருந்து வருகிறது.

ஆனால் வீடுகளில் புது வீடு கட்டி, கிரகப்பிரவேஷம் வைக்கும் போது அல்லது திருமணம் போன்ற ஏதாவது விஷயம் நடந்தால், பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது மட்டுமே இன்றைய கால கட்டத்தில் மாவிலை தோரணம் கட்டுகிறார்கள்.

மாவிலை வாஸ்து குறைபாட்டினை நீக்குவதற்காக மட்டுமின்றி காற்றை சுத்தப்படுத்தி, உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

இது மிகச் சிறந்த கிருமி நாசினியாக செல்படுவதால் வீட்டின் வாசலில் மாவிலைகளை கட்டும் வழக்கும் உள்ளது. இந்த மாவிலை தோரணத்தை எந்த முறையில், எந்த நேரத்தில் கட்டினால், என்ன பலன் கிடைக்கும்? அவற்றின் முழு பலனையும் அடைய என்ன செய்ய வேண்டும் என பாரப்போம்.

​மாவிலையின் மகிமை
மகா இலை அல்லது மகா சக்தி பொருந்திய இலை என்பதை குறிப்பதற்காக சொல்லப்பட்டது தான் காலப் போக்கில் மா இலை என்று மாறியது. இது தெய்வீக சக்தியை ஈர்த்து, தக்க வைக்கக் கூடியது என்பதால் தான் பழங்காலத்தில் மாவிலைகளின் மீது தான் கும்பம் வைப்பது, தெய்வ சிலைகள் வைப்பது ஆகியவற்றை செய்தனர்.

கலசங்கள் வைத்தாலும் அதிலும் மாவிலை தான் வைப்பார்கள். மந்திரத்தை உள்வாங்கி வைத்துக் கொள்ள கூடிய சக்தி இந்த மாவிலைக்கு உண்டு. அதனால் தான் கலசத்தில் உள்ள தீர்த்தங்கள் தெளிப்பதற்கும், தோஷங்கள் போக்குவதற்கும் மாவிலைகளை பயன்படுத்துகிறோம்.

மாவிலை கட்டும் முறை
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வீட்டின் வாசலில் மாவிலை தோரணம் கட்ட வேண்டும். அது காய்ந்த பிறகு அல்லது அடுத்த வெள்ளிக்கிழமை அதை அகற்றி விட்டு, வேறு இலைகளைக் கொண்டு தோரணம் கட்ட வேண்டும். 9 அல்லது 27 என்ற எண்ணிக்கையிலேயே மாவிலைகளை பயன்படுத்தி தோரணம் கட்ட வேண்டும். காய்ந்த மாவிலைகளை நீர்நிலைகளில் விட்டு விடலாம் அல்லது கால்படாத இடங்களில் போட்டு விடலாம்.

மாவிலைகளை தோரணம் கட்டும் போது, ஒவ்வொரு இலையை எடுக்கும் போதும் ஓம் என்ற பிரணவ மந்திரத்தை சொல்லி, தோரணத்தை கோர்க்க வேண்டும். இந்த மந்திரங்களை மாவிலை ஈர்த்து வைத்துக் கொள்ளும். இந்த இலைகளை தோரணமாக கட்டும் போது வீட்டிற்குள் குலதெய்வம், இஷ்டதெய்வம், அஷ்ட லட்சுமி உள்ளிட்ட தெய்வங்கள் வருவதற்கான அனைத்து தடைகளும் விலகி விடும்.

​மாவிலை கட்ட சரியான நேரம்
மாவிலையை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் கட்டுவது மிகவும் விசேஷமானதாகும். காலை 4 முதல் 05.30 வரையிலான பிரம்ம முகூர்த்த வேளையில் குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு, வீட்டில் உள்ள கஷ்டங்கள், பிரச்சனைகள் நீங்க வேண்டும், லட்சுமி கடாட்சம் நிறைய வேண்டும் என வேண்டிக் கொண்டு மாவிலையை கட்டும் போது அந்த வேண்டுதல் அப்படியே நிறைவேறும்.

பிரம்ம முகூர்த்த வேளையில் கட்டும் போது பிரபஞ்ச சக்திகளை மாவிலைகள் ஈர்த்து வைத்து, நம்முடைய வீட்டிற்குள் அனுப்பிக் கொண்டே இருக்கும். மாவிலை தோரணம் கட்டும் போது ஒவ்வொரு இலையிலும் மத்தியில் மஞ்சள், குங்குமம் வைத்து கட்ட வேண்டும். அதோடு நாட்டு மருந்துக் கடைகளில் விற்கும் அரகஜாவை கலந்து வைப்பது வீட்டில் வற்றாத செல்வ வளத்தை ஈர்க்கும். அரகஜா இல்லாதவர்கள் மஞ்சள், குங்குமம் மட்டும் வைத்து, தோரணம் கட்டலாம்.

Back to top button