உடல்நலம்

குடல் புழுவை உடனே வெளியேற்றும் சுண்டைக்காய் துவையல்… எப்படி செய்வது?

காய்கறிகளுள் மிகவும் சிறிதான காய் சுண்டைக்காய். சுண்டைக்காயை நுண் ஊட்டச் சத்துக்களின் சேமிப்புக் கிடங்கு என்றுகூட சொல்லலாம்.

கசப்பு சுவை கொண்ட இந்த சுண்டையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. சுண்டை வயிற்றில் உள்ள வாயுக்களை அகற்றி உடலை கட்டுக்கோப்புடன் காத்துக்கொள்ள உதவுகிறது.

மூச்சுக் குழாய் நோய்கள், வயிற்றுப் புழுக்கள், பேதி போன்றவற்றைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது. சமையலிலும் வத்தலாகவும், வத்தல் குழம்பு செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

இதில் கசப்புத் தன்மை காணப்படும் அளவிற்கு எண்ணில் அடங்கா மருத்துவ குணங்களும் நிறைந்துள்ளது.

சுண்டைக்காயில் அதிகளவில் கால்சியம் சத்தும் நிறைந்துள்ளது. அதனால் எலும்பு வலிமை கூடும்.

இத்தனை மருத்துவ குணம் நிறைந்த சுண்டைகாயில் சுவையாக துவையல் செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பொருட்கள் இளம் சுண்டைக்காய் – 1 கப்

எண்ணெய் – 2 தே.கரண்டி

தேங்காய்த்துருவல் – 3 தே.கரண்டி

உளுந்தம்பருப்பு – 2 தே.கரண்டி

வரமிளகாய் – 2

உப்பு – தேவையான அளவு

பெருங்காயம் – 1/2 தே.கரண்டி

செய்முறை
கடாயில் 1 தே.கரண்டி எண்ணெய் ஊற்றி வரமிளகாய், உளுந்தம்பருப்பு, பெருங்காயம் இவற்றை வறுத்து மிக்ஸியில் அரைத்து பொடியாக்கி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் கடாயில் மீதியுள்ள 1 தே.கரண்டி எண்ணெயை ஊற்றி சுண்டைக்காயை முழுதாக அப்படியே வதக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் பொடி செய்த பொருட்களுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும்.

பின்னர் வதக்கிய சுண்டைக்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு நீர் ஊற்றி கெட்டியாக அரைத்தெடுத்தால் மருத்துவ குணங்கள் நிறைந்த சுண்டைக்காய் துவையல் தயார்.

Back to top button