ஆன்மிகம்

மகாலட்சுமி ராஜயோகம் மற்றும் பண வரவு அதிகரிக்கக்கூடிய 5 ராசிகள்:

கடந்த (07.03.2024) ம் திகதி கும்ப ராசியில் பெயர்ச்சி ஆன சுக்கிரனுடன், ஆற்றல், வேகத்தை தரக்கூடிய செவ்வாய் பகவான் எதிர்வரும் (15.03.2024) ம் திகதி சேர உள்ளார். ஆதலால் உருவாகும் மகாலட்சுமி யோகத்தால் சில ராசியினருக்கு வியாபாரம் பெருகும், பண வருவாய் கூடும். கும்ப ராசியில் ஆட்சி அதிபதியாக சஞ்சரித்து வரும் சனி பகவானுடன், சுக்கிரன் சேர்ந்துள்ளார். அவருடன் மார்ச் 15ம் தேதி செவ்வாய் பகவானும் சேர உள்ளார்.

இதனால் உருவாகக்கூடிய மகாலட்சுமி ராஜயோகத்தால் சில ராசியனருக்கு உங்களின் தொழில், வேலை வாய்ப்புகள் பிரகாசமாகும். பண வரவு அதிகரிக்க உள்ள ராசிகளை பார்ப்போம்.

மகாலட்சுமி ராஜயோகம் அதிகரிக்கக்கூடிய மேஷ ராசி:

லாப ஸ்தானத்தில் சுக்கிரன் மற்றும் செவ்வாய் சேர்க்கை
சிக்கியுள்ள பணம் திரும்ப கிடைக்கும்
தொழில், வியாபாரத்தில் பணம் சம்பாதிக்கும் வாய்ப்புகள்
உழைப்புக்கு ஏற்ற வருமானம் மற்றும் முன்னேற்றம்
குடும்பத்தினரின் ஆதரவு

மகாலட்சுமி ராஜயோகம் அதிகரிக்கக்கூடிய மிதுனம் ராசி :

சுக்கிரன்-செவ்வாய் இணைவு நல்ல பலன்களைத் தரும்
வியாபாரம் பன்மடங்கு வளர்ச்சி
அதிர்ஷ்டம் உடன் இருக்கும்
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு
குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் ஆதரவு
வியாபாரிகளுக்கு நல்ல வருமானம்

மகாலட்சுமி ராஜயோகம் அதிகரிக்கக்கூடிய துலாம் ராசி :

பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன்-செவ்வாய் சேர்க்கை
வாழ்க்கையில் இருக்கும் தொல்லைகள் விலகும்
வியாபாரத்தில் லாபம் பன்மடங்கு உயர்வு
நண்பர்களிடமிருந்து பெரிய உதவிகள்
புதிய தொழில் வாய்ப்புகள்
வங்கி இருப்பு அதிகரிப்பு

மகாலட்சுமி ராஜயோகம் அதிகரிக்கக்கூடிய விருச்சிகம் ராசி :

நிதிநிலை முன்னேற்றம்
வியாபாரம் பெருகும் வாய்ப்பு
தொழிலதிபர்களுக்கு புதிய வாய்ப்புகள், வருமானம் அதிகரிப்பு
மிகப்பெரிய நிதி ஆதாயங்கள்
வணிகம் தொடர்பான திட்டங்களில் வெற்றி
பதவி உயர்வு, புதிய வாகனம், சொத்து வாங்கும் வாய்ப்பு
குடும்பத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சி
முதலீடுகள் வெற்றியைத் தரும்

மகாலட்சுமி ராஜயோகம் அதிகரிக்கக்கூடிய கும்பம் ராசி :

தொழில் தொடர்பான நல்ல செய்திகள்
நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வேலைகளை முடிக்கும் வாய்ப்பு
கூட்டுத் தொழிலில் வெற்றி
செல்வம் பெருக்கம்
எதிர்காலத்திற்கான முதலீடு
பணம் சேமிக்கும் வாய்ப்பு
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி
தொழிலில் திருப்தி

குறிப்பு:

இது ஒரு பொதுவான பார்வை. ஜாதகத்தில் உள்ள மற்ற கிரகங்களின் நிலை மற்றும் தசா புக்திகளின் படி பலன்கள் மாறுபடலாம்.
ஜோதிட ஆலோசகரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

புதிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button