சினிமா

ஏகே 62 இல் அஜித்துடன் இணைகிறாரா ஐஸ்வர்யா ராய்..?

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் உருவான ‘துணிவு’ திரைப்படம் கடந்த 11-ஆம் திகதி வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.

இதனைத் தொடர்ந்து லைகா நிறுவனம் தயாரிக்கும் ,விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே62-வது படத்தில் அஜித் இணைய இருக்கிறார்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற மே மாதம் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஏகே62 படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக தகவல்கசிந்துள்ளது.கடந்த 2000-ஆம் ஆண்டில் வெளியான ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Back to top button