சொந்த மக்களிற்கு எதிராக ஆயுதங்களை தயாரிக்கும் மியன்மார்!
சொந்த மக்களிற்கு எதிராக பயன்படுத்துவதற்காக மியன்மார் இராணுவம் பெருமளவில் ஆயுதங்களை தயாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநாவின் முன்னாள் உயர் அதிகாரிகள் 13 நாடுகளை சேர்ந்த நிறுவனங்களின் விநியோகங்களை பயன்படுத்தியே மியன்மார் ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மியன்மார் தொடர்பான விசேட ஆலோசனை குழுவே தனது அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
ஐநாவின் உறுப்புநாடுகள் பல தொடர்ந்தும் மியன்மாருக்கு ஆயுதங்களை விற்பனை செய்கின்றன ஐநாவின் முன்னாள் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மியன்மாரை தனிமைப்படுத்துவதற்காக மேற்குலகம் தடைகளை விதித்துள்ள போதிலும் இந்தியா அமெரிக்கா பிரான்ஸ் உட்பட பலநாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் வழங்கும் விநியோகங்களை பயன்படுத்தி மியன்மார் ஆயுதங்களை உற்பத்தி செய்துவருவதாக ஐநா தொடர்பான விசேட ஆலோசனை குழு தெரிவித்துள்ளது.
மியான்மாரில் தயாரிக்கப்படும் ஆயுதங்களை இராணுவத்தினை எதிர்ப்பவர்களிற்கு எதிரான அநீதிகளிற்கு மியன்மார் பயன்படுத்துகின்றது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.