சோள வயலில் விளைந்த லியோனல் மெஸ்ஸி
காற் பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி உலக காற் பந்தாட்டத்தின் பின் உலகின் எல்லாப்பகுதியிலும் பிரபலமாகி விட்டார் .இதற்கு ஆதாரமாக பல சம்பவங்கள் சமூக வலை தளங்களில் உலவுகிறது அவ்வாறு ஒரு சிறப்பான சம்பவம் தென் அமேரிக்காவில் நடைபெற்றுள்ளது.
தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில், சோள வயலில் விளையும் பயிர் நடுவே பிரத்யேகமாக வரையப்பட்டுள்ள ”லியோனல் மெஸ்ஸி”-யின் பிரம்மாண்ட ஓவியம் இணையதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.உலகக் கோப்பை கால்பந்தில் வெற்றிவாகை சூடிய மெஸ்ஸியின் தீவிர ரசிகரும், பொறியாளருமான கார்லோஸ் ஃபரிசெல்லி என்ற விவசாயி கோர்டோபா மாகாணத்தில் உள்ள தனது பச்சை வயலின் நடுவே புவி-குறியீட்டு கருவிகளை பயன்படுத்தி, சோள விதைகளை நடவு செய்து ஓவியத்தை உருவாக்கி உள்ளார்.சோள வயலில் மெஸ்ஸி-யின் ஓவியம் தீட்டப்பட்டிருப்பது போல பயிர்களை விளைவித்துள்ளார் ஃபர்செல்லி.