உலகச் செய்திகள்

பணவீக்கம் அதிகரித்த நாடாக ஜப்பான்

ஜப்பான் பணவீக்கம் மத்திய வங்கி இலக்கு வைத்த அளவை விடவும் இரண்டு மடங்காகவும், முக்கிய நுகர்வுப் பொருட்களின் விலை முந்தைய ஆண்டில் இருந்து கடந்த மாதத்தில் 4 வீதத்தால் அதிகரித்துள்ளது.

இது அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை குறைக்கும் வகையில் வட்டி வீதத்தை நிர்ணயிக்க ஜப்பான் மத்திய வங்கிக்கு அழுத்தம் கொடுப்பதாக உள்ளது.

விலை அதிகரிப்பு ஏற்பட்டபோதும் உலகின் மிகக் குறைந்த பணவீக்கம் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஜப்பான் தொடர்ந்தும் நீடிக்கிறது. உலகின் ஏனைய நாடுகளின் போக்குக்கு அமைவாக உலகின் மூன்றாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உள்ள ஜப்பான் கடந்த ஆண்டு வட்டி வீதத்தை வேகமாக அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய உத்தியோகபூர்வ தரவுகளின்படி கடந்த டிசம்பரில் அமெரிக்காவில் பணவீக்கம் 6.5 வீதமாக இருந்ததோடு யூரோ வலயத்தில் 9.2 வீதமாகவும் பிரிட்டனில் 10.5 வீதமாகவும் பதிவானது.

Back to top button