அரங்கேறும் தலிபான் கொடூரம்
தாலிபான் அரசு ஆப்கானிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெற உள்ள பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் மாணவிகளை பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என மிரட்டல் விடுத்துள்ளது.
இது தொடர்பாக வடக்கு மாகாணங்களில் உள்ள தனியார் பல்கலைக்கழங்களுக்கு, அந்நாட்டு உயர் கல்வி அமைச்சகம் விடுத்துள்ள சுற்றறிக்கையில், மாணவிகளை தேர்வு எழுத அனுமதிக்கும் பல்கலைக்கழங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மூத்த ஐ.நா. அதிகாரிகள் இந்த மாதம் இரண்டு முறை ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டனர். அப்போது, பெண்களின் உரிமைகளை பறிக்கும் வகையிலான அதிகார துஷ்பிரயோகத்தை நிறுத்தும்படி வலியுறுத்தினர். எனவே, தலிபான்கள் எந்த நேரத்திலும் தங்கள் உத்தரவை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கலாம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.தாலிபான்களின் இந்த அறிவிப்புக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்துள்ளது.