டொலரின் பெறுமதியில் சரிவு!
இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்று பதிவாகியுள்ள இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை கடந்த வெள்ளிக்கிழமை 332.06 ரூபாவாக காணப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் 332.81 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை விற்பனை விலை 351.51 ரூபாவில் இருந்து 356 ரூபாவாக அதிகரித்துள்ளது. சம்பத் மற்றும் கொமர்ஷல் வங்கி சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 330 ரூபாவாக காணப்படுவதுடன், விற்பனை விலை 350 ரூபாவிலிருந்து 345 ரூபாவாக குறைவடைந்துள்ளது. இதேவேளை, கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை கடந்த வெள்ளிக்கிழமை 332.96 ரூபாவாக பதிவாகியிருந்த நிலையில் இன்றைய தினம் 331.48 ரூபாவாக குறைந்துள்ளது. அத்துடன் கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை கடந்த வெள்ளிக்கிழமை 355.00 ரூபாவாக காணப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் 350.00 ரூபாவாக அதிகரித்துள்ளது.