இலங்கை
ஆசிரியர்களுக்கான கல்வி அமைச்சரின் விசேட அறிவிப்பு!
ஆரம்ப ஆசிரியர்களின் இடமாற்றக் கடிதங்கள் இன்றைய தினம் (21-03-2023) தபாலில் அனுப்பி வைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் (Susil Premajayantha) தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கை ஒன்றை விடுத்த கல்வி அமைச்சர், பிள்ளைகளின் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர் இடமாற்றங்கள் இடம்பெற்றால் மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாக குறிப்பிட்டார். கடந்த 3 ஆண்டுகளில் 8,893 ஆசிரியர் இடமாற்றங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.