இலங்கை

மனித உரிமையை எந்தவொரு கடன் பொறிமுறையும் குறைக்கக் கூடாது – சர்வதேச மன்னிப்புச் சபை

சர்வதேச நாணய நிதியத்துடனான இலங்கையின் ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை தேவை என சர்வதேச மன்னிப்புச் சபையின் பிராந்திய மனித உரிமைகள் தாக்கத்திற்கான சிரேஷ்ட பணிப்பாளர் டெப்ரொஸ் முச்செனா அழைப்பு விடுத்துள்ளார். 2022 ஆம் ஆண்டில் உலகின் மனித உரிமைகள் நிலை குறித்த சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்திர அறிக்கையின் பிராந்திய வெளியீட்டைக் குறிக்கும் வகையில் கொழும்பில் நடைபெற்ற மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். “சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பற்றிய விவாதம் இருப்பதை நாம்அறிவோம். அந்த ஒப்பந்தத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கோருகிறது. ஆகவே, விவாதிக்கப்படும் அனைத்தும் பொது வரம்பிற்குள் இருக்கும்”என்று அவர் மேலும் கூறினார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இந்த ஒப்பந்தங்கள் சமூகப் பாதுகாப்புகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் மேம்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

எந்த உதவி பொறிமுறையும் அல்லது கடன் பொறிமுறையும் மனித உரிமைகளை குறைக்கக்கூடாது, இலங்கையின் பொருளாதார நெருக்கடி மனித உரிமைகள் மீது பேரழிவான தாக்கத்தை ஏற்படுத்தியதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்திர அறிக்கை கண்டறிந்துள்ளது. பிராந்தியத்தில் உள்ள உரிமைகள் சீரழிவுக்கான பதில்களை மையமாகக் கொண்ட இந்த அறிக்கை, தெற்காசிய நாடுகள் மனித உரிமைச் சட்டத்தை ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அடிப்படையில் அப்பட்டமான பாசாங்குத்தனம் மற்றும் இரட்டைத் தரங்களின் திகைப்பூட்டும் நிகழ்ச்சியாகப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. பிராந்தியத்தில் எதிர்ப்பு தெரிவிக்கும் உரிமை குறைக்கப்பட்ட, பல நாடுகளில் இலங்கையும் ஒன்று என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.

Back to top button