இலங்கை

இலங்கையில் 2 மணிக்கு பின்னர் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 02 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேல், சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிலும் 75 மில்லிலீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button