ஏனையவை
இனி வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் பட்டர் கார்லிக் மஷ்ரூம் செய்யலாம்!
காளான் என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக காணப்படுகிறது. இதில் அதிகளவான புரதச் சத்துக்கள் காணப்படுகின்றன. சரி இனி பட்டர் கார்லிக் காளான் எவ்வாறு செய்வது எனப் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
காளான் – 600 கிராம்
உப்பில்லாத பட்டர்- 100 கிராம்
வெள்ளைப் பூண்டு – 1/4 கப் (நறுக்கியது)
வெங்காயம் – 1 (நறுக்கியது)
மிளகுத் தூள் – 1 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை – கால் கப் (நறுக்கியது)
செய்முறை
முதலாவதாக, ஒரு கடாயில் பட்டர் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும். பின்னர் வெட்டி வைத்த காளான், பொடியாக நறுக்கிய வெள்ளைப் பூண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும். அதன்பின்னர் உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்துவிடவும். இறுதியாக காளான் பொன்னிறமாக வந்ததும் நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து இறக்கினால் பட்டர் கார்லிக் காளான் ரெடி.