ஏனையவை

நாவூறும் சுவைமிக்க பால் போளி செய்வது எப்படி?

நம் நினைவிற்கு பொதுவாகவே பண்டிகை என்றாலே வருவது எல்லாம் ஒன்றே ஒன்று தான். இனிப்பு பண்டங்கள் இல்லாமல் எப்படி ஒரு பண்டிகை இருக்கும்? அதுபோலவே பால் இல்லாமலும் எப்படி இனிப்பு பண்டங்கள் உருவாகும். பெரும்பாலான இனிப்புகள் பாலில் தான் உற்பத்தி செய்யபடுகின்றது. அந்தவகையில் வீட்டிலேயே எப்படி சுவையான பால்போளி செய்யலாம் என தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்

மைதா- 1/2 கப், பால்- 1/2 லிட்டர் , எண்ணெய்- பொரிக்க தேவையான அளவு, சர்க்கரை- 4 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் தூள்- தேவையான அளவு, பாதாம்- 10

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா மா, எண்ணெய் மற்றும் தண்ணீர் சேர்த்து சப்பாத்தி பதத்திற்கு பிணைந்து அதை 20 நிமிடங்களாவுத ஊற வைத்துக்கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் பால், சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து, சிறிய பாதாம் பருப்புகளை சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி இடும் பலகையில் வைத்து பூரிகளாக எடுக்க வேண்டும். எண்ணெய் ஊற்றி அது காய்ந்த பின், பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இறுதியாக ஆறவைத்த பாலுடன் பூரிகளை போட்டு நன்றாக ஊற விடவும். நன்றாக ஊறிய பின் பரிமாறினால் சுவையான பால் போளி தயார்!

Back to top button