சினிமா

விஜய்யின் மகனுடன் ஜோடி சேரும் பிரபல நடிகையின் மகள்? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

பிரபல நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய்க்கு ஜோடியாக பிரபல நடிகை தேவயானியின் மகள் நடிக்க உள்ளதாக தகவல் தீயாய் பரவி வருகின்றது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திராக வலம்வரும் நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் சினிமாவில் நடிகராவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. சினிமா மேக்கிங் குறித்து வெளிநாட்டில் படித்து முடித்த இவர், தற்போது குறும்படங்களை இயக்கி வருகின்றார். விஜய் தன்னைப் போலவே மகனை ஹீரோவாக்கி விடவேண்டும் என்று முயற்சித்து வருகின்றார்.

மேலும், பல இயக்குனர்களும் விஜய்யின் மகனை நடிக்க வைக்க போட்டி போட்டுவந்தாலும், இயக்குனராகவே சஞ்சய்க்கு விருப்பமாகியுள்ளது. இந்நிலையில் விஜய் மகனுடன் நடிகை தேவயானியின் மகள் ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகின்றது. நடிகையின் மகளுடன் ஜோடி சேரும் விஜய்யின் மகன் சஞ்சய்யிடம் ஜோடி சேரும் தேவயானி மகள் சமீபத்தில் தேவயானியின் கணவரும் இயக்குனருமான ராஜகுமாரன் தனது மகளுக்கு ஜோடியாக விஜய் மகனை நடிக்க வைக்க ஆசை என்று கூறியுள்ளார். இயக்குனர் ராஜகுமாரனுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், இரண்டாவது மகள் இனியா தற்போது 12ம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர்ந்துள்ளார். நடிகையின் மகளுடன் ஜோடி சேரும் விஜய்யின் மகன் இந்நிலையில் நீ வருவாய் என திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாகவும், இதில் தனது மகள் இனியாவை நடிக்க வைக்க உள்ளதாகவும் கூறியுள்ளார். தொடர்ந்து இப்படத்தில் விஜய்யின் மகன் சஞ்சய் தனது மகளுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையையும் வெளியே அவிழ்த்துவிட்டுள்ளார்.

Back to top button