தினமும் காலையில் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ்: கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
மாதுளம் பழத்தில் வைட்டமின் சி, கே, இரும்பு சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், புரதசத்து ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த பழத்திற்கு தனி சிறப்பும், பல்வேறு நோய் தீர்க்கும் ஆற்றல் கொண்டுள்ளது. தினமும் காலையில் மாதுளை ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
மாதுளை பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் ப்ரீ ராடிக்கல்களால் செல்களில் ஏற்படும் சேதத்தைக் குறைப்பதோடு, புற்றுநோய் போன்ற கொடிய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. மாதுளம் பழ ஜூஸில் ப்ளேவோனாய்டுகள் உள்ளன. இது எலும்புகள் மற்றும் திசுக்களில் ஏற்படும் சேதத்தைக் குறைத்து, மூட்டுக்களில் ஏற்படும் அழற்சி பிரச்சனையான் ஆர்த்ரிடிஸைத் தடுக்கிறது.
தினமும் மாதுளம் பழ ஜூஸைக் குடித்து வந்தால், இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்களில் ப்ளேக்குகள் மற்றும் கொலஸ்ட்ரால்கள் வளர்வதைத் தடுத்து இதய நோய்களின் அபாயத்தைத் தடுக்கிறது.
மாதுளம் பழ ஜூஸை குடித்து வருவது, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைத்து கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவும்.
மாதுளையில் உள்ள வைட்டமின் சி ஆன்டிபாடி உருவாக்கத்தை மேம்படுத்தி, உடலைத் தாக்கும் நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், ஆபத்தான பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் ஈஸ்ட் தொற்றுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
மாதுளையில் உள்ள பி வைட்டமின்கள் உடலில் உள்ள கொழுப்புக்கள், புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட்டுக்களை ஆற்றலாக மாற்றுகிறது.இதில் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு தேவையான நார்ச்சத்துக்களும் உள்ளன.
எனவே மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் மாதுளை ஜூஸை தினமும் குடித்து வர உடனே சரியாகும்.
இதில் உள்ள பாலிஃபீனால்கள், உடலில் தேங்கியுள்ள கொழுப்பு செல்களை எளிதில் கரையச்செய்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
மேலும் மாதுளை சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை அளிக்கக்கூடியதாக பழமாக உள்ளது.