உலகச் செய்திகள்
ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் உள்ள ஷிகோகுவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இன்று (2024.02.26) காலை 6.24 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகியுள்ளது.
ஷிகோகுவில் 10 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தபோதும் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.