உலகச் செய்திகள்அமெரிக்கா
அமெரிக்காவில் திடீரென முடங்கிய விமான சேவைகள்!

அமெரிக்கா முழுவதும் இன்று உள்ளூர் விமான சேவைகள் திடீரென முடங்கியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான விமானங்கள் நாடு முழுவதும் தாமதமாகியுள்ளன.
விமானங்கள் அனைத்தும் அவசரமாக ஆங்காங்கே தரையிறக்கப்பட்டதாகவும் விமான போக்குவரத்து துறையின் இயங்கு தளத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விமானங்களை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இயங்கு தளத்தில் ஏற்பட்ட கோளாறுகளை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட அதிகாரிகள் விமானிகளுக்கு விமானத்திற்கு முந்தைய பாதுகாப்பு அறிவிப்புகளை வழங்கும் அமைப்பை சரிசெய்துள்ளனர் . அதனை தொடர்ந்து விமான சேவைகள் வழமைக்கு திரும்பியதாகவும்,
எனினும் தாமதங்களால் ஏற்பட்ட நெரிசல் காரணமாக மேலும் கால அட்டவணை சிக்கல்களுக்கு வழிவகுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.