உலகச் செய்திகள்
18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் திட்டம்

இந்தியா உட்பட உலகம் முழுவதும் 1.5 மில்லியன் ஊழியர்கள் அமேசான் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்கள். இந்நிலையில் 18,000 ஊழியர்களை அமேசான் நிறுவனம் வேலை நீக்கம் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அமேசான் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
பொளாதார மந்தநிலை உள்ளிட்ட காரணங்களால் அமேசான் நிறுவனத்தின் வருமானம் குறைந்து உள்ளதாகவும் இதனால் செலவைக் குறைப்பதற்காக 18 ஆயிரம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
வேலை நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு அவரவர் மெயில்களில் தகவல் அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளதால் அமேசான் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.