உலகச் செய்திகள்

ஆஸ்திரியாவில் பனிச்சரிவு – 8 பேர் பலி!

ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் திடீரென பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது . இதில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

வியன்னாவில் பனிச்சறுக்கு விளையாட்டு பிரபலமானது. இந்நிலையில், பள்ளி விடுமுறையைக் கொண்டாடும் விதமாக ஏராளமானோர் பனிச்சறுக்கு விளையாடி கொண்டிருந்தனர். இந்த வேளையில் அங்கு திடீரென பெரும் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிர் இழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .

பனிச்சரிவு என்றால் ?

பனியடுக்குச் சரிவு என்பது சரிவான மேற்பரப்பில் விரைந்த பனியின் பாய்வு ஆகும். இவை தொடங்கும் இடத்தில் பனிப்பாளத்தின் வலிமை வேறுபாட்டால் அதாவது பனிப்பாளத்தின் மீதுள்ள விசை அதன் வலிமையைக் காட்டிலும் கூடுதலாக அமையும்போது ஏற்படுகின்றன.

இது பனிப்பாளச் சரிவாகும். சிலவேளைகளில், இது படிப்படியாக மெல்லத் தளர்ந்து அகலமாகிப் பாய்கிறது. இது தளர்பனிச் சரிவு எனப்படுகிறது. பனிச்சரிவு தொடங்கிய பிறகு, கூடுதல் பனியால் பொருண்மையிலும் பருமனிலும் வளர்ந்து முடுக்கப்படுகின்றன. வேகமாகப் பனிச்சரிவு பாயும்போது. பனிக்கட்டி காற்றூடே கலந்து பனித்தூவியாகி பனித்தூவிச் சரிவை ஏற்படுத்துகிறது. இது ஓர் ஈர்ப்பியக்க ஓட்டமாகும்.

Back to top button