இலங்கையில் முன்னணி ஹோட்டலில் உணவு வாங்கிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

இலங்கையில் முன்னணி ஹோட்டலில் உணவு வாங்கிய நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இலங்கையில் இயங்கி வரும் பிரபலமான கேஎப்சி உணவகம் ஒன்றில் கோழி இறைச்சித் துண்டுகளை வாங்கிய நபரொருவர் மிக மோசமான அனுபவத்தினைப் பெற்றுள்ளார். குறித்த நபர் வாங்கிய கோழி இறைச்சித் துண்...

இலங்கையில் இயங்கி வரும் பிரபலமான கேஎப்சி உணவகம் ஒன்றில் கோழி இறைச்சித் துண்டுகளை வாங்கிய நபரொருவர் மிக மோசமான அனுபவத்தினைப் பெற்றுள்ளார். குறித்த நபர் வாங்கிய கோழி இறைச்சித் துண்டுகள் முழுமையாக சமைக்கப்படாமல், இரத்தத்துடன் இருந்துள்ளது. இதனால் கடும் கோபமடைந்த நபர், முழுமையாக சமைக்கப்படாத கோழி இறைச்சித் துண்டுகளோடு குறித்த உணவகத்திற்குச் சென்று ஊழியர்களிடம் முறையிட்டுள்ளார். இது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோழி இறைச்சித் துண்டுகள் முழுமையாக சமைக்கப்படாமலும், அதில் இரத்தம் உள்ளதையும் உணவகத்தின் நிர்வாக அதிகாரிகளுக்கு அவர் காண்பித்துள்ளார். மேலும், குறித்த இறைச்சித் துண்டுகள் தனது பிள்ளைகளுக்காக வாங்கிச் சென்றது என்றும் அவர்கள் இதனை உண்டு நோய்வாய்ப்பட்டால் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றும் தனது ஆதங்கத்தை குறித்த நபர் வெளிப்படுத்தினார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்