இம்முறை உயர்தரப் பரீட்சை பிற்போடப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது. உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி உச்ச நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் இன்று (22) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்நிலையில், வழக்கு இலக்கம் SC/FR/240/2023 தள்ளுபடி செய்யப்பட்டதுடன், வழக்கு இலக்கம் SC/FR/254/2023 மனுதாரர்களினால் மீள பெறப்பட்டது. அதன்படி, இலங்கைப் பரீட்சை திணைக்களம் இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை முன்னர் திட்டமிட்டபடி 2024 ஜனவரி 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நடத்தும் என அமைச்சு அறிவித்துள்ளது.