கடன் தொல்லை நீங்கி பணவரவு  அதிகரிக்க எளிய பரிகாரம் இதோ

கடன் தொல்லை நீங்கி பணவரவு அதிகரிக்க எளிய பரிகாரம் இதோ

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

கடன் பிரச்சனை என்பது சிலருக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை. சிலர் கடனை அடைப்பதற்காக கடுமையாக முயற்சி செய்வார்கள். ஆனால் எவ்வளவு முயன்றாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் கடனை அடைக்...

கடன் பிரச்சனை என்பது சிலருக்கு இருக்கும் ஒரு பெரிய பிரச்சனை. சிலர் கடனை அடைப்பதற்காக கடுமையாக முயற்சி செய்வார்கள்.

ஆனால் எவ்வளவு முயன்றாலும், எவ்வளவு சம்பாதித்தாலும் கடனை அடைக்க முடியாமல், கடன் பிரச்சனையுடன் போராடிக் கொண்டிருப்பார்கள்.

இப்படிப்பட்டவர்கள் இந்த எளிய பரிகாரங்களை செய்து வந்தாலே கடன் பிரச்சனையில் இருந்து விடுதலை பெற முடியும்.

இந்த பரிகாரத்திற்கு ஒரே ஒரு பொருள் தான் தேவை. இந்த பரிகாரம் என்ன என்பதை குறித்து விரிவாக பார்க்கலாம்.

மருத்துவகுணங்கள் நிறைந்த மிளகை கடன் பிரச்சினை தீர்வதற்கும், பண வரவு அதிகரிப்பதற்கும் பயன்படுத்தலாம்.

கடன் தொல்லை நீங்க பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த மிளகு பரிகாரத்தை செய்வது நல்ல பலனைக் கொடுக்கும். ஞாயிற்றுக்கிழமை மாலை 8 மணிக்கு மேல் முதல் இரவு 11.30 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்து கொள்ளுங்கள்.

நான்கு மிளகை எடுத்து கொண்டு நிலை வாசலுக்கு வெளியே சென்று குலதெய்வத்தை மனதார வேண்டி கையில் இருக்கும் மிளகை தலையை இடது புறமாக மூன்று முறை மட்டும் சுற்ற வேண்டும்.

இதற்கான பலன் உங்களை தேடிவரும். இந்த பரிகாரத்தை மூன்று வாரம் ஞாயிற்றுக்கிழமை செய்தால் பண கஷ்டத்திற்கு ஏதாவது ஒரு வகையில் விமோசனம் கிடைக்கும்.

அதே சமயம் கடன் பிரச்சனை தீர்வதற்கான பல வழிகள் உங்கள் கண் முன்னே நிற்கும்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்