கொழும்பில் நீண்ட நேர நீர் வெட்டு தொடர்பில் தகவல்!

கொழும்பில் நீண்ட நேர நீர் வெட்டு தொடர்பில் தகவல்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

கொழும்பு மற்றும் அதன் புறநகரின் சில பகுதிகளுக்கு நாளைமறுதினம் சனிக்கிழமை (25) பத்து மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நீர்வழங்கல் மற்...

கொழும்பு மற்றும் அதன் புறநகரின் சில பகுதிகளுக்கு நாளைமறுதினம் சனிக்கிழமை (25) பத்து மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

குறித்த தினத்தில் காலை 10 மணிமுதல் இரவு 9 மணிவரை இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

அதன்படி கொழும்பு, தெஹிவளை கல்கிசை, கோட்டே, கடுவெல மாநகர சபைகளுக்கு உட்பட்ட பிரதேசங்களிலும், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகர சபைகள் மற்றும் கொட்டிகாவத்தை - முல்லேரியா, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய நகரங்களிலும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்