சீனாவில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து - 17 பேர் பலி - 22 பேர் காயம்

சீனாவில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து - 17 பேர் பலி - 22 பேர் காயம்

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் இன்று அதிகாலை நன்சாங் கவுண்டி பகுதியில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் காயம் அடைந...

கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் இன்று அதிகாலை நன்சாங் கவுண்டி பகுதியில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 22 பேர் காயம் அடைந்துள்ளனர்.

கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் நிலவும் கடும் பனி மூட்டமே விபத்திற்கு காரணம் என்று அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

விபத்தினை தொடர்ந்து கடும் பனிமூட்டத்தால் எதிரே செல்லும் வாகனங்கள் தெரியவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் விளக்குகளில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வேகத்தை குறைத்து கவனமாக வாகனத்தை இயக்க வேண்டும் என்றும் சீன போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்