சீமான் மீதான வழக்கை திரும்ப பெற்ற விஜயலட்சுமி

சீமான் மீதான வழக்கை திரும்ப பெற்ற விஜயலட்சுமி

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளித்த புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளார். சீமான் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி பொலிஸி...

நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது அளித்த புகாரை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளார். சீமான் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி பொலிஸில் புகார் அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இவ்விவகாரம் தொடர்பில் அவர் தொடர்ந்து சீமான் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து பல்வேறு ஊடகங்களில் பேட்டியளித்தார். தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த சீமான் நஷ்டஈடு கேட்டு விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமிக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நிலையில் சீமான் மீதான வழக்கை விஜயலட்சுமி திரும்ப பெற்றுள்ளார். சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் அவர் எழுத்துப்பூர்வமாக புகாரை வாபஸ் வாங்கியுள்ளார்.

இதுகுறித்து விஜயலட்சுமி கூறுகையில், 'வழக்கை வாபஸ் பெற யாரும் கட்டாயப்படுத்தவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை, தனி ஒருவராக போராட முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை' என தெரிவித்துள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்