தமிழ் சினிமாவின் முன்னணி  இயக்குனர் சாலை விபத்தில் திடீர் மரணம்! பிரபலங்கள் இரங்கல்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் சாலை விபத்தில் திடீர் மரணம்! பிரபலங்கள் இரங்கல்

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

சினிமாவிற்கு நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸை முதன்முதலாக அறிமுகப்படுத்திய இயக்குனர் அற்புதன் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸை கடந்த 2002ம் ஆண்டு ஹீரோவாக அ...

சினிமாவிற்கு நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸை முதன்முதலாக அறிமுகப்படுத்திய இயக்குனர் அற்புதன் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். நடிகர் ராகவா லாரன்ஸை கடந்த 2002ம் ஆண்டு ஹீரோவாக அறிமுகப்படுத்திய படம் தான் அற்புதம். இந்த படத்தினை இயக்குனர் அற்புதன் இயக்கியுள்ளார். இப்படத்தில் ராகவா லாரன்ஸ், குணால், பிரமிட் நடராஜன், லிவிங்ஸ்டன், லாவண்யா, நந்திதா உள்பட பலரும் நடித்திருந்தனர்.

இதேவேளை இப்படத்தை இயக்கிய அற்புதன் சமீபத்தில் சாலை விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். 52 வயதாகும் இவர் அற்புதம் படத்தை தொடர்ந்து மனதோடு மழைக்காலம், செய்யவே சிறுகாளி படங்களை இயக்கியது குறிப்பிடத்தக்கது. அற்புதனின் மறைவு செய்தியை அறிந்த திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்