நாட்டில் இன்றைய காலநிலை நிலவரம்!

நாட்டில் இன்றைய காலநிலை நிலவரம்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

நாடளாவிய ரீதியில் இன்றைய நாளில் காலநிலை நிலவரம் தொடர்பில் வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் மழை பெய்யும் என...

நாடளாவிய ரீதியில் இன்றைய நாளில் காலநிலை நிலவரம் தொடர்பில் வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்