புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு

புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு தொடர்பில் வெளியான அறிவிப்பு

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

அடுத்த வாரம் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள்...

அடுத்த வாரம் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் இவ்வாறு வெளியிடப்பட உள்ளது. குறித்த தகவலை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறு பட்டியலிடும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சைக்காக 33, 7591 மாணவர்கள் பரிட்சைக்கு தோற்றியிருந்தனர். சுமார் 2888 பரீட்சை நிலையங்களில் இவர்கள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர். அடுத்த வாரமளவில் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்