பூட்டிய வீட்டினுள் இளைஞனின் சடலம்:  யாழில் பரபரப்பு

பூட்டிய வீட்டினுள் இளைஞனின் சடலம்: யாழில் பரபரப்பு

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

யாழ்ப்பாணம் நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் நெடுந்தீவு மேற்குப் பகுத...

யாழ்ப்பாணம் நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர் நெடுந்தீவு மேற்குப் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய குணாராசா தனுஷன் என்பவர் இனங்காணப்பட்டுள்ளார்.

அந்நிலையில், நேற்று திங்கட்கிழமை (30) அவரை காணவில்லை என வீட்டார் தேடிச்சென்றவேளை பூட்டிய வீட்டினுள் படுக்கையிலேயே இறந்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பிரதேச பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்கொண்டதாக கூறப்படும் நிலையில், இளைஞரின் உயிரிழப்புக்கான காரணம் வெளியாகவில்லை.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்