முகமாலை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழப்பு!

முகமாலை சந்தியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் உயிரிழப்பு!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

கிளிநொச்சி மாவட்டம் முகமாலை பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று மாலை முகமாலை சந்தியில் இட...

கிளிநொச்சி மாவட்டம் முகமாலை பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் நேற்று மாலை முகமாலை சந்தியில் இடம்பெற்றுள்ளது.

கண்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்து துவிச்சக்கரவண்டியில் பயணித்த முதியவருடன் மோதியுள்ளது. இதன்போது முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரித்துள்ளார்.

உயிரிழந்தவர் இத்தாவில் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய முத்தையா கந்தசாமி என தெரியவந்துள்ளது.

துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் எதிர் திசையில் பயணித்ததாகவும், அவர் மது போதையில் இருந்ததாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்