மொராக்கோ நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கார் பலி: உதவ தயார் நிலையில் இந்தியா

மொராக்கோ நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கார் பலி: உதவ தயார் நிலையில் இந்தியா

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

நூற்றுக்கணக்கானோரை பலி கொண்ட நிலநடுக்கம் மொராக்கோவின் மையப்பகுதியில் உள்ள அட்லஸ் மலைப்பகுதியில் உள்ள மரகேஷ் நகருக்கு அருகில் உள்ள ஆறு மாகாணங்களில் உணரப்பட்டுள்ளது. இந்த நிலையில...

நூற்றுக்கணக்கானோரை பலி கொண்ட நிலநடுக்கம் மொராக்கோவின் மையப்பகுதியில் உள்ள அட்லஸ் மலைப்பகுதியில் உள்ள மரகேஷ் நகருக்கு அருகில் உள்ள ஆறு மாகாணங்களில் உணரப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மொராக்கோவில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அனுதாபம் தெரிவித்துள்ளார்.

மொராக்கோவில் நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளமை மிகுந்த வேதனையளிப்பதாக நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அத்துடன், “இந்த துயரமான நேரத்தில், எனது எண்ணங்கள் மொராக்கோ மக்களுடன் உள்ளன. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இந்த கடினமான நேரத்தில் மொராக்கோவிற்கு அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளது” என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்