யாழ்.இந்து கல்லூரியில் உயர்தர கல்வியை மேற்கொள்ள வெளிமாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு

யாழ்.இந்து கல்லூரியில் உயர்தர கல்வியை மேற்கொள்ள வெளிமாவட்ட மாணவர்களுக்கு அழைப்பு

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

நாடளாவிய ரீதியில் வெளியாகியுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள் 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர கற்கையை யாழ் இந்து கல்லூரியி...

நாடளாவிய ரீதியில் வெளியாகியுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுக்கொண்ட மாணவர்கள் 2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர கற்கையை யாழ் இந்து கல்லூரியில் தொடர்வதற்கு பாடசாலை அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், முன்னுரிமை அடிப்படையில் மலையகம் மற்றும் வெளிமாவட்டங்களில் உள்ள பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களுக்கு விடுதி மற்றும் ஏனைய பொருளாதார வசதிகள் செய்து கொடுக்கப்படும் எனவும் பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே யாழ் இந்து கல்லூரியில் உயர்தர கற்கை நெறியை தொடர விரும்பும் மாணவர்கள் யாழ் இந்து கல்லூரியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தினூடாக விண்ணப்பிக்க முடியும் எனவும் பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்