விஜயலட்சுமியால் தொடரப்பட்ட வழக்கில் சீமான் ஆஜர்!

விஜயலட்சுமியால் தொடரப்பட்ட வழக்கில் சீமான் ஆஜர்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

நடிகை விஜயலட்சுமி வழக்கில் வரும் 12ஆம் திகதி விசாரணைக்கு நாம் தமிழர் சீமான் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து ஏம...

நடிகை விஜயலட்சுமி வழக்கில் வரும் 12ஆம் திகதி விசாரணைக்கு நாம் தமிழர் சீமான் ஆஜராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி 2011ஆம் ஆண்டு பொலிஸில் புகார் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, மீண்டும் கடந்த மாதம் 25ஆம் திகதி சீமான் மீது ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பின்னர் விஜயலட்சுமியிடம் 6 மணிநேரம் விசாரணை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, சீமான் மீது வழக்குப்பதிவு செய்து, 9ஆம் திகதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், சீமான் கட்சிப் பணிகளுக்காக வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால், வரும் 12ஆம் திகதி காலை 10 மணிக்கு காவல் நிலையத்தில் ஆஜராவதாக அவரது தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரின் பேரில் சீமான் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்