500 மில்லியன் பார்வையாளர்களைக் ஈர்த்த அரபிக்குத்து!

500 மில்லியன் பார்வையாளர்களைக் ஈர்த்த அரபிக்குத்து!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் யூடியூபில் 500 மில்லியன்பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது, சிவகார்த்திகேயன் எழுதிய இந்த பாடலை , அனிருத் மற்றும் ஜோனிதா காந...

பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற அரபிக்குத்து பாடல் யூடியூபில் 500 மில்லியன்பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது,

சிவகார்த்திகேயன் எழுதிய இந்த பாடலை , அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி இருவரும் இணைந்து பாடினர். இந்தப் பாடலுக்கு தற்போதைய பிரபல நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் நடனம் அமைத்திருந்தார்.

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. பீஸ்ட் படம் பெரிதாக ரசிகர்களைக் கவரவில்லை என்றாலும், அனிருத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய வெற்றியைப் பெற்றன. குறிப்பாக ‘அரபிக் குத்து’ வெளியாகி இந்திய அளவில் பிரபலமானது.

அரபிக்குத்து பாடல் 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்ததை தொடர்ந்து படக்குழுவினர் இதுவரை பார்த்திராத அனிருத் மற்றும் ஜோனிதா காந்தி இருவரும் இணைந்து ஆடிய விடியோவை வெளியிட்டுள்ளனர்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்