அடர்த்தியான  நீளமான கூந்தல் வளர தினம் ஒரு டம்ளர் சத்தான Biotin Smoothie: செய்முறை இதோ

அடர்த்தியான நீளமான கூந்தல் வளர தினம் ஒரு டம்ளர் சத்தான Biotin Smoothie: செய்முறை இதோ

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

பொதுவாக பலருக்கும் இருக்கும் பிரச்சனையான முதி உதிர்தல், மெலிதான முடி, நரைமுடி போன்றவையை தடுத்தது நீளமான கூந்தலுக்கு இந்த ஒரு Biotin Drink போதுமானது. இந்த Biotin Drink-ல் ஊட்டச்சத்...

பொதுவாக பலருக்கும் இருக்கும் பிரச்சனையான முதி உதிர்தல், மெலிதான முடி, நரைமுடி போன்றவையை தடுத்தது நீளமான கூந்தலுக்கு இந்த ஒரு Biotin Drink போதுமானது. இந்த Biotin Drink-ல் ஊட்டச்சத்து நிறைந்த பொருட்கள் சேர்க்கப்படுவதால் முடி பிரச்சனைகளை தடுத்து அடர்ந்த நீளமான கூந்தலுக்கு பெரிதளவில் உதவுகிறது. இந்த ஆரோக்கியம் நிறைந்த சத்தான Biotin Drink எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
நிலக்கடலை- 2 ஸ்பூன்
பாதாம்- 10
முந்திரி- 5
சூரியகாந்தி விதை- 1 ஸ்பூன்
பூசணி விதை- 1 ஸ்பூன்
எள்ளு- 1 ஸ்பூன்
பேரீட்சைப்பழம்- 4
வால்நட்- 4
வாழைப்பழம்- 1
தேங்காய் பால்- 1 கப்

செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் எடுத்துவைத்துள்ள நிலக்கடலை, பாதாம், முந்திரி, சூரியகாந்தி விதை, பூசணி விதை, எள்ளு மற்றும் வால்நட் ஆகியவற்றை போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவும்.

குறைந்தது 8 மணி நேரமாவது இதை நன்கு ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். பின் இதை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒன்று இரண்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின் இதில் எடுத்துவைத்துள்ள பேரீட்சை பழம் மற்றும் வாழைப்பழம் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

இறுதியாக இதில் தேங்காய்ப்பால் அல்லது பால் சேர்த்து நன்கு அரைத்து ஒரு டம்ளரில் ஊற்றி பரிமாறினாள் சத்தான, ஆரோக்கியம் நிறைந்த Biotin Drink தயார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்