அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைப்பயிற்சி முடித்துவிட்டு மயக்கம்!  மருத்துவமனையில் அனுமதி

அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைப்பயிற்சி முடித்துவிட்டு மயக்கம்! மருத்துவமனையில் அனுமதி

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சருக்கு...

தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சருக்கு உடல்நலக்குறைவு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தினமும் காலையில் நடைபயிற்சி செய்வது வழக்கம். உடல்நலத்தை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர். அந்தவகையில், இன்று காலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடைபயிற்சி முடித்துவிட்டு தனது வீட்டிற்கு வந்து பார்வையாளர்களை சந்தித்தார். அப்போது, அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் அவரை, கிண்டியில் உள்ள கருணாநிதி உயர் சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு சர்க்கரை அளவு குறைந்ததால் மயக்கம் ஏற்பட்டுள்ளது என்று கூறினர். இதனால் அவர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், அமைச்சரின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்