இந்தியா – இலங்கை படகு சேவை விரைவில் ஆரம்பம்!

இந்தியா – இலங்கை படகு சேவை விரைவில் ஆரம்பம்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

விரைவில் நாகப்பட்டினம் - யாழ்ப்பாணம் காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு சேவைகள் தொடங்கப்பட உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உறுதிப்படுத்தியுள்ளார். பெப்ரவரி 2024...

விரைவில் நாகப்பட்டினம் - யாழ்ப்பாணம் காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு சேவைகள் தொடங்கப்பட உள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உறுதிப்படுத்தியுள்ளார். பெப்ரவரி 2024 இறுதிக்குள் இந்த சேவை செயற்படும் எனவும் உயர் ஸ்தானிகர் நம்பிக்கை தெரிவித்தார். வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார்- இராமேஸ்வரம் படகு இணைப்பு தொடர்பிலும் , இந்த ஆண்டு இறுதிக்குள் தீர்வு கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

எனினும், சுமூகமான எல்லைக் கடப்புகளை உறுதிப்படுத்த ஜெட்டி பழுது, சுங்க மற்றும் குடியேற்ற வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு மேம்பாட்டின் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார். இந்தியா-இலங்கை கூட்டாண்மையின் மூலக்கல்லாக இணைப்பின் முக்கியத்துவத்தையும், இரு நாடுகளுக்கும் பொருளாதார செழுமையை உந்துவதில் அதன் பங்கையும் அவர் வலியுறுத்தினார். அதேசமயம் இலங்கையின் பொருளாதார நன்மைகளுக்கு அப்பால், சுற்றுலா, ஹோட்டல் மேம்பாடு மற்றும் புதிய தொழில்துறைகளை மேம்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்