இந்தியாவில் தொடர்ந்து வீழ்ச்சியடையும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

இந்தியாவில் தொடர்ந்து வீழ்ச்சியடையும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இந்தியாவில் கடந்த இரண்டு தினங்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்ப...

இந்தியாவில் கடந்த இரண்டு தினங்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி இந்திய மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கொரோனா தொற்றால் புதிதாக 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

நேற்று முன்தினம் 228 ஆக இருந்த தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று 214 ஆக வீழ்ச்சியடைந்திருந்த நிலையில் இன்றும் பாதிப்பு குறைந்துள்ளது.

இதேவேளை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 79 ஆயிரத்து 924 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 46 ஆயிரத்து 781 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 2 423 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை கொரோனா காரணமாக இந்தியாவில் மரணித்தவர்கள் எண்ணிக்கை 530720 ஆக காணப்படுகிறது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்