இரவு கட்டுநாயக்காவில் இடம்பெற்ற பயங்கர விபத்து சம்பவத்தில்  பரிதாபமாக உயிரிழந்த இருவர்!

இரவு கட்டுநாயக்காவில் இடம்பெற்ற பயங்கர விபத்து சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்த இருவர்!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

நேற்று கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் கட்டுநாயக்க பகுதி...

நேற்று கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்துச் சம்பவம் கட்டுநாயக்க பகுதியில் நேற்று (22.10.2023) இரவு வேளையில் இடம்பெற்றுள்ளதுடன், அப்பகுதியில் கூடிய பொதுமக்களினால் பதற்ற நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மட்டக்களப்பைச்சேர்ந்த தனிநபர் ஒருவருக்குச் சொந்தமான குறித்த பேருந்து கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போதே கட்டுநாயக்க பகுதியில் முச்சக்கர வண்டியுடன் மோதப்பெற்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன் போது முச்சக்கர வண்டியில் பயணம் செய்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்