இரு பேருந்துக்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர்கள் காயம்

இரு பேருந்துக்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர்கள் காயம்

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

இன்று வெள்ளிக்கிழமை (3) காலை ஹொரணையிலிருந்து மஹரகம நோக்கி செல்லும் பிரதான வீதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து இடம்பெற்றுள்லது. இந்த விபத்தில் 7 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளதாக...

இன்று வெள்ளிக்கிழமை (3) காலை ஹொரணையிலிருந்து மஹரகம நோக்கி செல்லும் பிரதான வீதியில் இரண்டு பஸ்கள் மோதி விபத்து இடம்பெற்றுள்லது. இந்த விபத்தில் 7 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்த மாணவர்கள் ஹொரண ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஹொரணையிலிருந்து மஹரகம நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று, ஹொரணையிலிருந்து குடா உடுவ நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் பஸ் சாரதிகள் இருவரையும் ஹொரணை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்