இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Tamil Aran 1 நிமிடம் வாசிப்பு

2023 இல் இதுவரையான காலப்பகுதியில் 47 ஆயிரத்து 353 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. இலங்கை சுற்றுலா அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்...

2023 இல் இதுவரையான காலப்பகுதியில் 47 ஆயிரத்து 353 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை சுற்றுலா அதிகார சபையின் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

கடந்த 1ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரையான காலப்பகுதியில் குறித்த சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த காலப்பகுதியில் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வந்துள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி ரஷ்யாவிலிருந்து 12 ஆயிரத்து 64 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், இந்தியாவில் இருந்து 5 ஆயிரத்து 838 பேரும், ஜேர்மனியில் இருந்து 3 ஆயிரத்து 945 பேரும், இங்கிலாந்தில் இருந்து 3 ஆயிரத்து 862 பேரும், பிரான்சில் இருந்து 2 ஆயிரத்து 241 பேரும் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஒரு நிலையத்தை தேர்வு செய்யவும்
ரேடியோ
ரேடியோ
நிலையத்தை தேர்வு செய்யவும்